style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு. தமிழரசன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை தமிழரசன் சந்தித்தார்.
எனது மகளின் திருமணத்திற்கு வாழ்த்தியதற்காக அவருக்கு நன்றி கூறினேன். ரஜினிகாந்த் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். தமிழக வளர்ச்சியை விரும்புகிறவர். மறைந்த முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் பிரபலம் வாய்ந்தவர். ஒரு நடிகராக மக்களிடையே செல்வாக்கு பெற்றவர்.
எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்ய கூடாது, அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.