ADVERTISEMENT

''அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது'' - நீதிமன்றம் கருத்து  

12:13 PM Jun 08, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் மீதான விசாரணையில், ''நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அரசின் கொள்கை முடிவு குறித்த இதுபோன்ற பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தொடரப்படுகின்றன. கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமையைக் கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ''உணவகம், பேக்கரிகள், மளிகை கடைகள் ஊழியர்களிடையே மேலும் கரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்'' எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT