ADVERTISEMENT

ஒருவர் கூட சேராத 72 பொறியியல் கல்லூரிகள்.... அதிர்ச்சிதரும் கலந்தாய்வு முடிவுகள்...

05:50 PM Oct 09, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63,154 இடங்களை நிரப்புவதற்கான இணைய வழி கலந்தாய்வு, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. நேற்று வரை இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலுடன், 131 கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பொது கலந்தாய்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 12 அரசு பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே 100 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளன. இதில், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. பொதுக் கலந்தாய்விற்கு பிறகும் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 56.4 சதவீதம் இடங்கள் காலியாகவே உள்ளன.

பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,10,836 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வில் 69,752 இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவம், விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் 1,443 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 1,63,154 இடங்களில் 71,195 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது, 43.6 சதவீதம் இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 56.4 சதவீதம் அதாவது 91,959 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 48.2 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பியிருந்தன. இந்தாண்டு 4.6 சதவீதம் குறைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT