Advertisment

சாலையில் உலாவுவது மேகங்கள் அல்ல; கேள்விக்குறியாகும் நீர் நிலைகள்

நீர்நிலைகளில் கழிவு நீர் மற்றும் சாயப்பட்டறை நீர் கலப்பதால் நீர்நிலை மாசடைவதுடன் சில இடங்களில் ரசாயன மாற்றம் காரணமாக வெண் நுரை பொங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் ஆழ்துளைக்கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நுரை நுரையாகப் பொங்கி வந்தது. நிலத்தடி நீர் வரை ரசாயன கழிவுநீர் சென்றுவிட்டதைஇந்தசம்பவம் உணர்த்தியிருந்தது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண்மாயிலிருந்து திடீரெனவெண் நுரைகள் பஞ்சு போன்று சாலையில் பரவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.

Advertisment

இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது படும் இந்த நுரை அரிப்பை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாகத்தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அயன் பாப்பாகுடி கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. வெள்ளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்டபகுதிகளில் உள்ள பீரோ தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன நீர் ஆகியவை கலக்கிறது. இதனால் கண்மாய் நீர் மாசடைந்து இதுபோன்ற வெண் நுரை பொங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Advertisment

Lake water system madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe