Advertisment

publive-image

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் உருவப்படத்தை சட்டசபையில் அவரின் நினைவு தினமான வரும் ஆகஸ்ட் 7 தேதி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க இருப்பதாகவும், அதற்காக அழைப்புவிடுக்கவே நேற்று அவர் டெல்லி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடியாக ஒளிபரப்ப ஆவன செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். ''மக்கள் பிரதிநிதிகள் நடத்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துகொள்ள நேரடி ஒளிபரப்பு உதவும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது சவாலான விஷயம் அல்ல''என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.