Advertisment

அழகாய் இல்லை... கணவன் டார்ச்சரால் மனைவி தற்கொலை!

தாயை சின்ன வயதில் இழந்த நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் நேற்று (28-ம் தேதி) இரவு தீகுளித்து தற்கொலை செய்து கொண்டார். அா்சனாவின் மரணம் அந்த பகுதியை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் தாயை இழந்த அவர் அந்த பகுதியில் வயதுக்கு மூத்த பெண்களை அம்மா என்றே அழைத்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள எல்லாரிடத்திலும் அன்பாக பழகி வந்தார்.

Advertisment

kanyakumari

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் மகளை பறிகொடுத்த தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அா்சனா. தாய் இல்லாத குறையை காட்டாமல் தாயாகவும் தந்தையாகவும் மூன்று பேரையும் வளா்த்தேன். மகளை விருப்பபட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவன் திருமணம் செய்தான். இரண்டு மாதம் சந்தோஷமாக இருந்த அவா்கள் அதன்பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் ஒல்லியாக அழகு இல்லாமல் இருக்கிறேன் என குற்றம் சொல்லி தினமும் கணவா் சண்டை போடுவதாக என்னிடம் சொல்லுவாள்.

Advertisment

இதனால் மகள் குண்டாக அக்கம் பக்கத்தினா் சொல்வதையெல்லாம் கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு வந்தாள். அதன் பிறகு சுவையாக சமையல் செய்யவில்லை என்று அதையும் குற்றம்சொல்லி அவளை அடிக்கடி அடிப்பதால் தினமும் நிம்மதி இல்லாமல் மனவேதனையில் இருந்து வந்தாள். இந்தநிலையில் தான் அவள் தற்கொலை செய்து இருக்கிறாள். அது கொலையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் என் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கு காரணமானவா்களுக்கு உடனடி தண்டனையும் கொடுக்க வேண்டும் என்றார்.

கணவா் சிவன் கூறும்போது, வழக்கம் போல் நான் காலையில் வேலைக்கு சென்று விட்டேன். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வர நேரமானது. அந்த நிலையில் தான் அவள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எனக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

திருமணமான 7 மாதத்தில் அா்ச்சனா தற்கொலை செய்து கொண்டதால் நாகா்கோவில் கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Kanyakumari wife husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe