ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹேமலதா என்பவர்கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அந்த தனியார் பள்ளியில்பாடபுத்தங்களுக்கு ரூபாய் 5000, சீருடை, ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களுக்கு ரூபாய் 5000 என கேட்பதாக புகார் தெரிவித்து இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஸ்கூல் பேக், லஞ்ச்பேக் போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்த கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்திற்குஉத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.