Advertisment

காவல்துறை உயர் அதிகாரிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் வடநாட்டு இளைஞர்கள்!

Northern youths cheating police officers and  money

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகளின் மற்றும் காவலர்கள் ஃபேஸ்புக் ஐடியை போலியாக உருவாக்கி அவர்களது நண்பர்கள் உறவினர்களுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து அதன் மூலம் நூதன் முறையில் பணம் பறிக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக நடைபெற்றுவருகிறது.

வட நாட்டு இளைஞர்கள், தமிழகத்தின் காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கை துவங்கி அதன்மூலம் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அவர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, காவல்துறை அதிகாரி கஷ்டத்தில் இருப்பதுபோல் பேசி உறவினர்களிடம் கூகுள் பே மூலம் பணம் செலுத்த சொல்லும் வடநாட்டு கும்பல் நேற்று திருவண்ணாமலையில் டி.எஸ்.பி ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற முகமது பசுல்லாவின் பேஸ்புக் போலி ஐடி மூலம் உறவினர்களுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து உறவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூகுள் பே-யில் பணம் செலுத்த சொல்லி கேட்டிருக்கிறார்கள்.

இந்தத் தகவல் சென்னையிலிருந்து மாலை ஆறு மணி அளவில் காவல்துறையைச் சேர்ந்த அவரது உறவினர் மூலம் தெரியவரவே சுதாரித்துக்கொண்டதால் டி.எஸ்.பி முகமது பசுல்லா உறவினரிடம் பணம் செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனால் அவரது உறவினரின் பணம் தப்பியது இதுதொடர்பாக முன்னாள் டிஎஸ்பி முகமது பசுல்லா திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் முதல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோல் சம்பவம் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. முனிரத்தினம் டி.எஸ்.பி, ஜீவானந்தம் டி.எஸ்.பி, வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், அம்பத்தூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார், ஆகியோரது ஃபேஸ்புக் போலி ஐடி மூலம் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கஷ்ட சூழ்நிலை உள்ளதாக தெரிவித்து பணம் கேட்கும் கும்பல் ஊடுருவி வருகிறது. காவலர்களின் உறவினர்கள் நண்பர்கள் இதன்மூலம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் காவல்துறை சைபர் கிரைம் உடனடியாக இதன் பேரில் நடவடிக்கை எடுக்க அவர்களது உறவினர்கள் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe