
மேற்குவங்க மாநிலம், கல்கத்தாவில் இருந்து ஹௌரா எக்ஸ்பிரஸ் சென்னை வழியாக புதுச்சேரிக்கு செல்லும். இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். அதன்படி நேற்று காலை ஹௌரா எக்ஸ்பிரஸ், விழுப்புரம் ஜங்ஷன் அருகே வந்தபோது ரயில்வே பாதுகாப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில் ஒரு வாலிபரின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ எடைக்கொண்ட கஞ்சா இரண்டு பொட்டலங்களாக இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், ஒரு லிட்டர் பாட்டிலில் கஞ்சாவை ஆயிலாகதயாரித்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்திவந்த வாலிபரை பிடித்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்சி பகுதியைச் சேர்ந்த சிசீரா குமார் கிரி(32) என்பதும், இவர் புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களைச் தேர்ந்த சில நபர்களுக்கு ஒடிசாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், கஞ்சா மூலம் தயாரிக்கப்பட்ட ஆயிலையும் விற்பனைக்கு கடத்தி வந்து தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.