Advertisment

ஈரோடு அருகே வடமாநில இளைஞர் உயிரிழப்பு; போலீசார் தீவிர விசாரணை!

Northern State youth  passed away near Erode

ஈரோடு அடுத்த சங்ககிரி ரயில் நிலையத்திற்கும் - மாவேலி பாளையம் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் நேற்று காலை வட மாநில வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

Advertisment

அந்த நபர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இருந்தாரா? அல்லது ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Train Erode police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe