Advertisment

சென்னையில் பயங்கரம்; காவலர் மீது வடமாநிலத் தொழிலாளர்கள் சரமாரி தாக்குதல்

Northern State workers barrage beaten on security guard in Chennai

Advertisment

தமிழ்நாட்டில் சென்னை, திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர்.அந்த வகையில் அம்பத்தூர்அருகே பட்டரவாக்கத்தில்உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டபோது வடமாநில தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பலர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மாறிமாறி கடுமையாக தக்கிக்கொண்டுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர் ரகுபதி நேரில் சென்று வடமாநில தொழிலாளர்களை கண்டித்துள்ளார்.

அப்போது வடமாநிலத் தொழிலாளர்கள் காவலர் ரகுபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் தலையில் பலமாக அடிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் கூடுதல் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

Advertisment

இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் ரகுபதியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குசிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் ரகுபதி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் தாக்கிய நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காவலர் ரகுபதி மீது தாக்குதல் நடத்திய வட மாநில தொழிலாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் ரகுபதி தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe