Advertisment

சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

Northern State worker lose their live  after wall collapses

Advertisment

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்று (19-05-25) காலை முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் நாளை (20-05-25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (20-05-25) கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அடையாறு போட் கிளப் பகுதியில் மழைநீர் வடிகால் பணியின் பொழுது தடுப்புச் சுவர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மீட்புப் படையினரின் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

northeast Adayar police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe