பிஹார்மாநிலம்,வைஷாலிமாவட்டம்,சந்தோடிபகுதியைசேர்ந்தவர் பிண்டுமகட்டோ(39). இவர் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஈரோடு மாவட்டம்,மொடக்குறிச்சிஅருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான பிண்டுமகட்டோகடந்த 2வருடங்களாகசொந்த ஊருக்கும் செல்லவில்லைஎனதெரிகிறது. தினமும் மது குடித்து வரும் அவர், நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையின் இருசக்கர வாகன நிறுத்தத்திடத்திலேயே படுத்து விட்டார்.
இந்த நிலையில், நேற்று காலையில், தொழிற்சாலைஓட்டுநர்ஒருவர் அங்கு வந்தபோது பிண்டுமகட்டோதலைக்குப்புற கீழே விழுந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு, அரசு தலைமைமருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பிண்டுமகட்டோஇறந்துவிட்டதாகத்தெரிவித்தார். இதுகுறித்து,மொடக்குறிச்சிபோலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்