Advertisment

வட மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற தமிழர்கள் தவிப்பு!

மதுரை மற்றும்திண்டுக்கல்லைச்சேர்ந்த45 பேர் கடந்த 9ம் தேதி மதுரை பத்மா டூரிஸ்ட் மூலம் கல்கத்தா, காசி, அயோத்தி, அகமதாபாத், பஞ்சாபில் உள்ள பொற்கோவில் என பல்வேறு இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் 24 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வரை இருந்தனர்.

Advertisment

ஆனால் திடீரென அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் வட மாநிலத்துக்குச் சுற்றுலா சென்ற மதுரை திண்டுக்கல்லைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பஞ்சாபிலுள்ள பொற்கோயில் வெளியே தங்க இடம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வருகிறார்கள்.

Advertisment

.

dindugal Tourists Northern

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த மோகன் நம்மைத் தொடர்பு கொண்டு பேசியபோது, சுற்றுலா வந்தவர்களில் 45 பேரில் 26 பேர் பெண்கள். மீதி 19 பேர் ஆண்கள். அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் தங்குவதற்கு சாப்பாடு வசதிக்கு இடம் இல்லாமல் தவித்து வருகிறோம். இது சம்பந்தமாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை எப்படியும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

dindugal Tourists Northern State

அதுபோல் நானும் வனத்துறை அமைச்சர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இருந்தாலும் நக்கீரன் மூலமாவது நாங்கள் சொந்த ஊருக்கு வர வேண்டுமென்று வலியுறுத்தி உங்களுக்குத் தகவல் சொல்லுகிறோம். அதன் அடிப்படையில் நீங்களும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பஞ்சாபில் இருந்து எங்களைத் திண்டுக்கல் மதுரைக்கு வருவதற்கு வழி செய்ய வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினார். அதைத் தொடர்ந்து நாமும் வனத்துறை அமைச்சர் சீனிவாசனையும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியையும் தொடர்புகொண்டு வடமாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்.

corona virus dindugal north Tamil Nadu Tourists
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe