/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/santhos_0.jpg)
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவரது மனைவி வித்யா (60). வயதான இந்த தம்பதி, வயதான இந்த தம்பதி, தங்களது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த தம்பதி நேற்று மாலை தங்களது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொடூரமாக செய்யப்பட்டு கிடந்த தம்பதியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், மோப்ப நாயைக் கொண்டு குற்றவாளியை தேடியதில் அந்த நாய், அருகில் உள்ள ஒரு வீட்டில் நின்றது. அந்த வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு ரத்த கறை இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அங்கு மர்ப நபர் ஒருவர் நடந்துச் சென்றுள்ளார். அவரைப் பிடித்து விசாரித்ததில், தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரது கால் நகத்தில் ரத்தக்கறை இருந்ததைப் பார்த்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் பீகாரைச் சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்பதும் அவர் தான் வயதான தம்பதியை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
நேற்று மாலை, பாஸ்கரன் கடைக்குச் சென்ற சந்தோஷ் குளிர்பானம் வாங்கியுள்ளார். அப்போது, பாஸ்கரனின் மனைவி வித்யா அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பார்த்த சந்தோஷ் அதை திருட முடிவு செய்துள்ளார். அதன் பின்பு, தனது வீட்டுக்குச் சென்று சுத்தியல் ஒன்றை எடுத்து வந்து வித்யாவின் தலையில் அடித்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். இதில், வித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த பாஸ்கரனையும் சுத்தியால் அடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதன் பின்பு, தனது வீட்டுக்குச் சென்று கை, கால்களை கழுவிக் கொண்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)