
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்ணிடம் நகை வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநிலநபர்களைப்பிடிக்க நூற்றுக்கணக்கானபோலீசார்குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வயதான பெண்மணியிடம் 6 சவரன் நகையைவடமாநிலத்தைச்சேர்ந்த இரண்டு நபர்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அப்பெண்மணி கூச்சலிட்டுள்ளார்.இதனால் ஒன்றுதிரண்ட அப்பகுதி மக்கள் நகை பறிப்பில்ஈடுபட்டவர்களைத்தேடிச்சென்றனர். அதேபோல்போலீசாருக்கும்தகவல் கூறப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் உடனடியாக வந்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், நகையைக் கொடுக்கவில்லை என்றால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதால்நகையைக்கழற்றி கொடுத்ததாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதுதெரியவந்ததைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கானபோலீசார்அங்குகுவிக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடியின் பின்பகுதியில் இருக்கக்கூடிய ஏரி பகுதிவனாந்தரபகுதியாக உள்ள நிலையில், அந்த பகுதி வழியாகத்தான் கொள்ளையர்கள் ஓடினார்கள் என்ற தகவல் தெரிய வர, போலீசார்ஏரியை ஒட்டிய வனப்பகுதியில் கடந்த 5 மணிநேரமாகத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்டபோலீசார்பத்து குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)