Skip to main content

இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை- வானிலை ஆய்வு மையம்!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
weather

 

தென்மேற்கு வாங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், 

 

தென்மேற்கு வாங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலான இடங்களில் இடைவெளிவிட்டு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலை இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சதாகமான சூழ்நிலை எனக்கூறினார்.  

சார்ந்த செய்திகள்