
வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22ம் தேதியிலிருந்து 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு அதிக அளவில் மழை தரக்கூடியது வடகிழக்கு பருவமழை. இந்நிலையில்,இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியப்பகுதியை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவிலிருந்து முழுவதுமாக வெளியேறும் சூழல் அக்டோபர் மூன்றாம் மாதத்தில் தொடங்குவதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு அக்டோபர் 22-25 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் போது சராசரியாக அக்டோபரில் 177.2 மில்லி மீட்டர், நவம்பரில் 178.8 மில்லி மீட்டர், டிசம்பரில் 92 மில்லி மீட்டர் என மொத்தம் தமிழகத்தில் 448 மில்லி மீட்டர் மழை பெய்வது இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us