Northeast monsoon has already started .. Heavy rain in 8 districts!

Advertisment

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் தென்மேற்கு பருவமழை இயல்பான 34 சென்டி மீட்டரைவிட அதிகமாக 42 சென்டி மீட்டர் பெய்துள்ளது. இது 23 சதவீதம் அதிகம். தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக். 28ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு அக். 25ஆம் தேதியே தொடங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், திருப்பூர், திருவாரூரில் இன்று (25.10.2021) கனமழைக்கு வாய்ப்புள்ளது எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.