வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஜலால்பள்ளம். இங்கு குடியுள்ள அலி என்பவர் வீட்டில் மே 18 ந்தேதி இரவு 8 மணியளவில் நுழைந்த வட மாநில இளைஞர் வீட்டில் இருந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளார், அடிவாங்கி எழுந்திருக்க முடியாத நிலையில் கீழே விழுந்துள்ளார். வீட்டில் பீரோவில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடிக்க முயன்ற போது, அந்த பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

Advertisment

  North young man who stole into the house... people attacks

சத்தம் கேட்டு அக்கம்பக்க வீட்டில் குடியிருப்பவர்கள், தெருவில் அமர்ந்திருந்த பொதுமக்கள் ஓடிவந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியே ஒருவன் ஓடிவர அவனை பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். உள்ளே சென்று பார்த்தவர்கள் அடிவாங்கிய நிலையில் இருந்த அந்த பெண்மணியை பார்த்தவர்கள் பிடிப்பட்ட வடமாநில இளைஞனை சரமாரியாக தாக்கி கட்டிவைத்தனர்.

இதுப்பற்றி ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்க்கு தகவல் கூறினர். தகவல் சொல்லி ஒருமணி நேரமாக யாரும் வராததால் மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். தகவல் கேள்விப்பட்டு பின்னர் அவசரமாக வந்த போலிஸார் மக்களிடம்மிருந்து அந்த இளைஞனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவன் தன் பெயர் பப்லு என கூறியதாக கூறுகின்றனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.