Advertisment

குழந்தையைக் கடத்த முயன்ற வட மாநில இளைஞர்; சுற்றி வளைத்த ஊர் மக்கள்

North State youth who tried to lift the child; Villagers surrounded

சேலம் மாவட்டம், ஓமலூரில் குழந்தையைக் கடத்த முயன்ற வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத்தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisment

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ளது முத்துநாயக்கன்பட்டி கிராமம். அங்குள்ள செட்டியப்பனூர் பகுதியில் வசித்து வந்த பாலமூர்த்தி என்பவரின் மகள் வர்ணிகா ஸ்ரீ வீட்டின் முன்புவிளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுதுஅங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு குழந்தை வர்ணிகா ஸ்ரீயைதூக்கிக்கொண்டு ஓட முயன்றார். அப்பொழுது குழந்தை கத்தியுள்ளது. உடனடியாக வந்த குழந்தையின் தந்தை பாலமுருகன் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இளைஞரைத்துரத்தினர். அப்பொழுது பயத்தில் அந்த இளைஞர் குழந்தையை முட்புதரில் வீசிவிட்டுத்தப்ப முயன்றார்.

Advertisment

சுற்றி வளைத்த பொதுமக்கள் அந்த வடமாநில இளைஞரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக போலீசாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரியிடம் வடமாநில இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். வடமாநில இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் குழந்தையைக் கடத்த முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police omalur Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe