Advertisment

வடமாநில இளைஞரை சுற்றி வளைத்த போலீஸ்; ரயில் நிலையத்தில் பரபரப்பு

North State youth surrounded by police; Busy at the railway station

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல்பொருட்கள் மற்றும் சமூக விரோதச் செயல்பாடுகளைத்தடுப்பதற்காகரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை ஒடிசாவில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் திருச்சிக்கு வந்து சேர்ந்து.

Advertisment

இந்நிலையில் ரயில்வே ஜங்ஷனில்உள்ள இரண்டாவது நடை மேடை சுரங்கப்பாதையில் சந்தேகப்படும்படியாக ஹவுராவில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வாலிபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொண்டு வந்த உடைமைகளைச் சோதனை செய்தபோது 4 கிலோ (2 மூட்டைகள்) கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இதன் மதிப்பு சுமார் 80 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் நடைபாதையில் கேட்பாரற்றுக்கிடந்தபையை சோதனை செய்தபோது, 14 கிலோ (4 மூட்டைகள்) எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் நாயக் (26) என்பவரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

arrested Cannabis police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe