Advertisment

ரயில் முன் பாய்ந்த வடமாநில இளைஞர்; பதைபதைக்க வைக்கும் சிசிடிவு காட்சிகள்

North State youth passed away after falling in front of a train

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ஜங்ஷனாக இருக்கிறது. எப்போதும் பயணிகள் வருகை இருப்பதால் பரபரப்பாகவே இருக்கும். நேற்று நடைமேடை நான்கில் தானப்பூரில் இருந்து பெங்களூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென நடைமேடையிலிருந்து இறங்கி நடந்து வந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இதனைப்பார்த்து பயணிகள் அலறினர், சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். ரயில் சென்றபின் பார்த்தபோது அவரது உடல் துண்டாகி நசுங்கிப்போய் இருந்தது. இதன் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisment

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முதற்கட்ட விசாரணையில், அவர் வட மாநிலத்தைச் சேர்ந்த நபராக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவர் யார் எனத் தெரிந்த பின்பே எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என காரணம் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.

jolarpettai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe