இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா?'-கவிஞர் வைரமுத்து கண்டனம்  

Is the North the only direction for India? -Poet Vairamuthu condemned

"நீங்கள் இந்தியரா?" என திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால், அதிர்ச்சி அடைந்ததாகஅண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்கனிமொழி.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.

அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா? என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கனிமொழி எம்.பி. !

இது தொடர்பான விவாதங்கள் எழுந்தநிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா?இந்திதான் இந்தியாவை ஆள பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? இந்தி மொழிக்கு சம உரிமை வழங்குவதுதான்நாட்டை இணைத்துள்ளகயிற்றைஇற்றுப்போகாமல் கட்டிக்காக்கும்.ஆதிக்கத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசப்பட்ட நஞ்சில் நனைந்தஅம்புஅது எனக்கூறியுள்ளார்.

Hindi imposition kanimozhi Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe