நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிகளவில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களை பயன்படுத்திவருகின்றனர். இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இயங்காத பேருந்துகள்! ரயில் நிலையங்களில் அலைமோதும் மக்கள் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-1_68.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-3_38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th_65.jpg)