tamilisai

Advertisment

சேலத்தில் செய்தியாளர்ளை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில்,

முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேண்டும். ஆனால் குற்றச்சாட்டு சொன்னவுடன் பதவி விலக வேண்டும் என்று அவசியமில்லை.

பெண்களுக்கு அநீதி இழைப்பவர் யாராக இருந்தாலும் எந்த பதிவில் இருந்தாலும் விசாரிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும், திமுக, கம்யூனிட் போன்ற கட்சிகள்பெண்கள் மீதான பாலியல் புகாரில் பாரபட்சம் காட்டுகிறது. வைரமுத்து மீது சின்மயி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். எஸ்.வி சேகரை கண்டிக்கும் பலர் நேரடியாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை கண்டிக்காதது ஏன்?

Advertisment

கூட்டத்திற்காக யாரும் சபரிமலை செல்வதில்லை. கடவுளை வணங்குவதற்காகவே செல்கின்றனர். கமலஹாசன் போன்றவர்களுக்கும் கூட்டம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும் என கூறினார்.