Skip to main content

''யார் மனசும் நோகக்கூடாதுங்க'' - வைரலாகும் வாக்குச் சீட்டு!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

'' Nobody should mind '' - a punch in every symbol!

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 

 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து சின்னத்திற்கும் சீல் குத்தி வாக்களித்த வாக்குச் சீட்டு படிவத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி, சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது. ‘யார் மனசும் நோகக்கூடாதுங்க’ உள்ளிட்ட கேப்ஷன்களில் கேலியாக இந்தப் புகைப்படம் பகிரப்படுகிறது. வடிவேலு காமெடி காட்சி ஒன்றுடன் ஒப்பிட்டும் இந்தப் புகைப்படம்  வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வார்டு உறுப்பினரான ரவுடியின் மனைவி... பதவியேற்பு விழாவிலேயே கஞ்சா வழக்கில் கைது!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Rowdy's wife arrested in cannabis case at Ward member inauguration

 

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து பதவியேற்பு விழா என்பது நேற்று நடைபெற்றது.

 

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதவியேற்க வந்த பிரபல ரவுடியின் மனைவியை கஞ்சாக்கடத்தல் வழக்கில் பதவியேற்பு விழா கூட்டத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9 ஆவது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர் விஜயலக்ஷ்மி. இவர் செங்கல்பட்டில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார்.

 

உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக்கூடாது, என் மனைவிக்கு ஊராட்சி மன்றத் துணை தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சிறையில் இருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 50 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலக்ஷ்மி நேற்று பதவியேற்க வந்த நிலையில், அவரை போலீசார் பதவியேற்பு விழா மேடையில் வைத்தே கைது செய்தனர். கஞ்சா கடத்தி விற்றுவந்தது தெரியவந்த நிலையில் அவரை கைது செய்ததாக போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

'ஒரு எதிர்க்கட்சிக்கான குறைந்தபட்ச வெற்றியைக் கூட அதிமுகவிற்கு மக்கள் தரவில்லை' - மு.க. ஸ்டாலின்

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

People did not give the AIADMK even the slightest victory for an opposition' - MK Stalin

 

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் (12/10/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுவருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்று எந்நாளும், எப்போதும் நெஞ்சில் வைத்துச் செயலாற்றுங்கள். மக்களின் குறைகள் நீக்கப்பட வேண்டுமேயன்றி நிர்வாகம் மீது குறைசொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடக்கூடாது. மக்கள் கிட்டத்தட்ட 100 சதவிகித வெற்றியை திமுகவிற்கு கொடுத்துள்ளார்கள். ஒரு எதிர்க்கட்சிக்கான குறைந்தபட்ச அளவு வெற்றியைக் கூட அதிமுகவிற்கு மக்கள் தர முன்வரவில்லை. எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது. மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமது எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உதித்தெழுந்த சூரியன், விரைவில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் உதித்திட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.