கஞ்சா விற்ற இளைஞர் கைது!

no work; Young man in cannabis sale!

மேச்சேரி அருகே, வேலை கிடைக்காத விரக்தியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே செட்டிகாரிச்சியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்குத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, மேச்சேரி காவல் ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட காவலர்கள் செட்சிக்காரிச்சியூர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவருடைய வீட்டில் சோதனை நடத்தினர்.

அந்த வீட்டில், 6.50 கிலோ கஞ்சா இரண்டு பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றைப் பதுக்கிவைத்திருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர் பெயர் சந்தோஷ் (26) என்பதும், வேலை இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைதுசெய்த காவல்துறையினர், அவருடன் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள்? எங்கிருந்து கஞ்சா வாங்கி வருகிறார் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

Cannabis Salem
இதையும் படியுங்கள்
Subscribe