பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் அளிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, காவிரி விவகாரத்தில் பாஜகவும், அதிமுகவும் நட்பாக உள்ளதாக குட்டிக் கதை கூறி விமர்சித்தார்.

Advertisment

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்திற்காக நாடாளுமன்றம் முடங்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆந்திர பிரச்னைக்காக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது, காவிரி பிரச்னைக்காக இல்லை.

நமக்காக எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. பாஜகவோடு கூட்டணியும் இல்லை, ஆதரவும் அளிக்கவில்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Advertisment