Skip to main content

''எந்த மானமுள்ள தமிழனும் அமித்ஷா காலில் விழ மாட்டார்''-ராகுல் பேச்சு!  

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 

இந்நிலையில் இன்று தற்பொழுது சென்னை அடையாறில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ''அனைத்து மொழிகளுக்கும் மரியாதை என்பதே இந்தியா என்பதின் மையமாக இருக்கவேண்டும். எந்த மானமுள்ள தமிழனும் அமித்ஷா காலில் விழ மாட்டான். ஊழல் செய்ததால் தமிழக முதல்வர் அமித்ஷாவிடம் சரணாகதி அடைந்துள்ளார். டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல் தமிழகத்தில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை வேண்டும். எனக்கு கீழ் கும்பிடு போட்டு நில் என்பதே பாஜகவின் சித்தாந்தம். பாசத்தால் அரவணைப்பது காங்கிரசின் சித்தாந்தம். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதரிகள். நாம் ஒரு மடங்கு அன்பை கொடுத்தால் தமிழர்கள் இரு மடங்கு அன்பை திருப்பித் தருவார்கள். நான் தமிழ் மொழி கற்று வருகிறேன். திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகளைப் படித்துள்ளேன்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்