Advertisment

முறையான அழைப்பில்லை; எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது- டிகேஎஸ்.இளங்கோவன்

tks ilangovan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாளை மறுநாள் சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் அந்த விழாவில் திமுக பங்கேற்காது என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விழாவிற்கு வருகிறீர்களா எனஎங்களை கேட்டுவிட்டு அழைப்பிதழில் பெயர் போடவில்லை. வழக்கமாகஒரு மாவட்டத்தில் அரசு விழா நடந்தால் அந்த மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களின் பெயர்களை போடுவார்கள். அப்படித்தான் எங்கள் பெயரையும் போட்டிருக்கிறார்களே தவிர அரசோ, அமைச்சர்களோ அவரை அழைத்து நீங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என சொல்லி இருந்தால் ஒரு வேளைகலந்துகொண்டிருப்பார். அழைப்பிதழில் பெயர் இருக்கிறது என்பதை தாண்டி முறையான அழைப்பு இல்லை எனவே அதில் பலனில்லை என்று கருதுகிறோம் என கூறியுள்ளார்.

tks ilangovan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe