Advertisment

சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் சடலத்தை நெல் வயலில் தூக்கி செல்லும் அவலம்!

கதச

Advertisment

புவனகிரி அருகே உள்ள அழிச்சிகுடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் தெருவில் உள்ளவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி நீண்டகாலமாக சரியில்லை. இதனால் இறந்தவர்களின் சடலங்களை நெல்வயல்களில் இறங்கி தூக்கி செல்லும் அவலம் தொடர்ந்து வருகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுகிழமை இந்த பகுதியில் வசித்த பெண் ஒருவர் இறந்துள்ளார். சாலை வசதி சரியில்லாததால் இறந்தவரின் சடலத்தை அப்பகுதியினர் வயலில் இறங்கி தூக்கிச் சென்றனர்.எனவே இப்பகுதியில் நிரந்தரமான சுடுகாட்டுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம் கூறுகையில், "இதே போல் வடக்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரியமேடு என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பிற்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள் இவர்களுக்கும் சுடுகாட்டுக்கு செல்ல சாலை இல்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த நிலையை பார்த்தாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

funeral
இதையும் படியுங்கள்
Subscribe