Skip to main content

காவேரி வாரியம் அமைக்க அதிமுக போல எந்த கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
jayakumar


காவேரி மேலாண்மை அமைக்க அ.தி.மு.க போல எந்த கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இந்திய வரலாற்றில் பெரிய அளவில் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தது அ.தி.மு.க, அதுவும் நம்முடைய காவிரி பிரச்சனைக்காக. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறது.

அதேபோல நாடாளுமன்றத்தில் இதுவரையிலும் எந்த ஒரு கட்சியும் சரி, எந்த ஒரு ஆட்சியும் சரி இவ்வளவு அழுத்தம் கொடுத்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தமிழக மக்களின் நலன் கருதி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்