ADVERTISEMENT

“இந்து மதத்தினரை தவிர வேறு எந்த மதத்தினரும் பயப்படவில்லை” - கீ. வீரமணி

03:48 PM Oct 26, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட 9 மாத கர்ப்பிணியான எழிலரசி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அறிவியலை நம்பனும் மூட நம்பிக்கைகளை நம்பினால் எதையும் சாதிக்க முடியாது. கருவுற்ற பெண்களுக்கு ஒரு பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதை எல்லாம் பொய் என நிரூபிக்க ஒரு எடுத்துக்காட்டாக உணவு உட்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தான் டெலிவரி. குழந்தை பிறந்ததும் ஊடகங்களிலும் காட்டுவதற்குத் தயாராக உள்ளேன்” எனக் கூறினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய 5 மாத கர்ப்பிணியான சத்யா, “இது எல்லாம் மூட நம்பிக்கை. சூரிய கிரகணத்தின் போது சாப்பிட்டால் குழந்தைக்கு எதாவது ஆகும் என பயமுறுத்தி வைத்துள்ளனர். இதில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்” எனக் கூறினார்.

மேலும் இது குறித்துப் பேசிய கீ.வீரமணி, “கிரகணத்தின் போது சாப்பிட்டால் ஆபத்து. கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் வரக்கூடாது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. எல்லோரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். ஒவ்வொரு வருடமும் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எந்த அளவிற்கு மூட நம்பிக்கை என்றால் கோவிலில் கடவுளையே கிரகணம் தாக்கும் என்னும் அளவிற்கு வந்தால் கிரகணம் பெரிதா கடவுள் பெரிதா என்ற கேள்வி கேட்க வேண்டும் அதுதான் மிக முக்கியம். ராக்கெட் விடுவதற்கு முன்னால் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜை செய்தார்கள். இப்போ திருப்பதி ஏழுமலையானே கிரகணத்தை பார்த்து பயப்படுகிறாரே. ஏன் கோவிலை மூடுகிறான். விஞ்ஞானத்தை படிப்பது வேறு, பட்டம் பெறுவது வேறு, ராக்கெட் விடுவது வேறு, பகுத்தறிவு என்பது வேறு.

உலகில் நம் நாட்டை தவிர, இந்து மதத்தினை தவிர வேறு எந்த மதத்தில் இருக்கிறவர்களும் பயப்படவில்லை. ஒருவேளை இதைப் பார்த்து பயந்திருந்தால் தான் உண்டு” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT