Skip to main content

“இந்து மதத்தினரை தவிர வேறு எந்த மதத்தினரும் பயப்படவில்லை” - கீ. வீரமணி

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

"No other religion is afraid except Hindus" - Kee Veeramani

 

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் சூரிய கிரகணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 

திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட 9 மாத கர்ப்பிணியான எழிலரசி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அறிவியலை நம்பனும் மூட நம்பிக்கைகளை நம்பினால் எதையும் சாதிக்க முடியாது. கருவுற்ற பெண்களுக்கு ஒரு பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். அதை எல்லாம் பொய் என நிரூபிக்க ஒரு எடுத்துக்காட்டாக உணவு உட்கொண்டேன். எனக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தான் டெலிவரி. குழந்தை பிறந்ததும் ஊடகங்களிலும் காட்டுவதற்குத் தயாராக உள்ளேன்” எனக் கூறினார். 

 

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய 5 மாத கர்ப்பிணியான சத்யா, “இது எல்லாம் மூட நம்பிக்கை. சூரிய கிரகணத்தின் போது சாப்பிட்டால் குழந்தைக்கு எதாவது ஆகும் என பயமுறுத்தி வைத்துள்ளனர். இதில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்பதால் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்” எனக் கூறினார்.

 

மேலும் இது குறித்துப் பேசிய கீ.வீரமணி, “கிரகணத்தின் போது சாப்பிட்டால் ஆபத்து. கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது வெளியில் வரக்கூடாது என்பதெல்லாம் மூட நம்பிக்கை. எல்லோரும் சிற்றுண்டி சாப்பிட்டோம். ஒவ்வொரு வருடமும் சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். எந்த அளவிற்கு மூட நம்பிக்கை என்றால் கோவிலில் கடவுளையே கிரகணம் தாக்கும் என்னும் அளவிற்கு வந்தால் கிரகணம் பெரிதா கடவுள் பெரிதா என்ற கேள்வி கேட்க வேண்டும் அதுதான் மிக முக்கியம். ராக்கெட் விடுவதற்கு முன்னால் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜை செய்தார்கள். இப்போ திருப்பதி ஏழுமலையானே கிரகணத்தை பார்த்து பயப்படுகிறாரே. ஏன் கோவிலை மூடுகிறான். விஞ்ஞானத்தை படிப்பது வேறு, பட்டம் பெறுவது வேறு, ராக்கெட் விடுவது வேறு, பகுத்தறிவு என்பது வேறு. 

 

உலகில் நம் நாட்டை தவிர, இந்து மதத்தினை தவிர வேறு எந்த மதத்தில் இருக்கிறவர்களும் பயப்படவில்லை. ஒருவேளை இதைப் பார்த்து பயந்திருந்தால் தான் உண்டு” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தளராது செயல்பட்டு வருபவர்” - கமல்ஹாசன் வாழ்த்து

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

kamalhassan birthday wishes to k veeramani

 

திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தினார். அந்த புகைப்படங்களை அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி. வீரமணி அவர்களின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் ‘வீரமணி வெற்றி மணியாக ஒலிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டு வருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர்  கி. வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

 

 

 

Next Story

“பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு பெரியாரின் கொள்கை தான் அடித்தளம்” - சோனியா காந்தி

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Sonia Gandhi says Periyar's policy is the foundation to bring down the BJP

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பா.ஜ.க. ஆட்சியை வீழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். அதே போல், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கி ஆதரவை பெருக்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு, பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணியை முன்னெடுக்கும் பணிகளை பாராட்டியும் கடிதம் எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்துக்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பெரியார் திடலுக்கு என்னை அழைத்தற்கு நன்றி. மேலும், இந்தியா கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி. 

 

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்களின் மூலம் தான் மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். பெரியாரின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் தான் நம்மை வழி நடத்தும். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.