Skip to main content

'தமிழகத்தை சேர்ந்த யாரும் பாதிக்கவில்லை; 5 பேரும் நலமுடன் உள்ளனர்'-தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு  

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

'No one from Tamil Nadu is affected; all 5 people are safe' - Tamil Nadu official announcement

 

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும்  இந்த விபத்தில் சிக்கி காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திலிருந்து 28 பேர் மட்டும் இந்த ரயிலில் பயணித்ததாகவும் அவர்களில் எட்டு பேரை மட்டும் ரீச் செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது. அண்மை தகவலின்படி இரண்டு பேரை அறிய முடிந்துள்ளது. மீதமுள்ள ஆறு பேர் பற்றி விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இதில் பாதிக்கப்படவில்லை. அறிய முடியாமல் இருந்த ஐந்து பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

பா.ஜ.க. கூட்டணி முயற்சி தோல்வி; வெளியான பரபரப்பு தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP Coalition efforts fail Exciting information released
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

BJP Coalition efforts fail Exciting information released
பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி

இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.