'குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை'-ரகுபதி பேட்டி

nn

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். திமுக என்ற பழம்பெரும் கட்சியையாராலும் அசைத்துப் பார்க்க முடியாது'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாகவும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற இந்த மரணம் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. கிருஷ்ணகிரி வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையிலும், அவருடைய தந்தை விபத்திலும் உயிரெழுந்துள்ளனர்'' என தெரிவித்தார்.

Krishnagiri Pudukottai ragupathi
இதையும் படியுங்கள்
Subscribe