ops eps

Advertisment

எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னையும் ஓபிஎஸ்சையும் பிரிக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

நேற்றைய சட்டமன்றத்தில் திமுகவின் துறைமுருகன் எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

இதற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் துறைமுருகன், ஜெயல லிதா அறிவித்ததை பற்றியும் நீங்கள் அறிவித்ததை பற்றியும் கூறிய நீங்க இடையில் ஒருவர் முதலமைச்சராக இருந்தார், அவர் அறிவித்ததை ஏன் விட்டுவிட்டீங்க? அவர் பாவம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு அக்கறையாக கேட்டதற்கு நன்றி, உங்களின் நோக்கம் புரிகிறது. எங்கள் ஒற்றுமையை பார்த்து துறைமுருகனுக்கு கண் உறுத்துகிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் எங்களின் ஒற்றுமையை பிரிக்க முடியாது என அவர் கூறினார்.