Advertisment

விஜய் சேதுபதியை யாரும் தாக்கவில்லை - பெங்களூரு போலீசார்!

k;

பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பெங்களூர் போலிசார் விளக்கமளித்துள்ளனர்.பெங்களூர் விமானநிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில நண்பர்களுடன் போலீஸ் பாதுகாப்போடு வெளியேற முயன்ற போது மர்ம நபர் ஒருவர் பின்னால் இருந்து அவரை தாக்குவது போல் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த மர்ம நபர், யாரை தாக்க முயன்றார் என்று தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த சிஆர்பிஎப் காவலர்கள் தாக்குதல் நடத்தியவரை பிடித்தனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்குதல் நடத்தினார் என்ற விபரம் இதுவரை வெளியாகஇந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

Advertisment

அதில், " விஜய் சேதுபதியுடன் விமானத்தில் வந்த நண்பர் ஒருவருக்கும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. அவரை தாக்கவே இவர் அங்கு வந்துள்ளார், விஜய் சேதுபதிக்கும் தாக்குதலில் ஈடுபட்டவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் சேதுபதியை அவர் தாக்கவில்லை. விஜய் சேதுபதியின் நண்பர் தரப்பும், தாக்குதல் நடத்திய நபரும்சமாதானம் செய்துகொண்டதால் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை" என்றனர்.

Advertisment

vijaysethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe