Advertisment

“சிபிஐ விசாரணை தேவையில்லை” - அமைச்சர் ரகுபதி!

publive-image

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

publive-image

Advertisment

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது” எனத் தெரிவித்திருந்தார்.

publive-image

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிசியளித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்து. இதனால் இல்லாத குற்றச்சாட்டுகளைத்தெரிவித்து சட்டப்பேரவையை முடக்க முயற்சித்தார். பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய் ஆகும். அதிமுகவினர் வேண்டுமென்றேகேள்வி நேரத்தில் பிரச்சனை எழுப்புகின்றனர். கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர். அதே சமயம் அவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த போதும் அதிமுகவினர் அதனைக் கேட்கவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் எத்தனைப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. கள்ளச்சாரயத்தில் எங்களுக்கு என்ன தேவை, என்ன அவசியம் இருக்கிறது?கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

kallakurichi CBI ragupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe