கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.ஆனால் கடந்த 7ஆம் தேதி தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது.இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது,அந்த வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில்டாஸ்மாக் கடைகள் கடந்த 8-ம் தேதியே மூடப்பட்டது.
அதனை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் நாளை மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்திருந்த இந்த இடைக்கால தடை உத்தரவில், உயர்நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை திறக்க விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. குறிப்பாகஆதார் அட்டைகளை கொண்டுவர வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியிருக்கிறது.
உயர்நீதி மன்றத்தின் உத்தரவிற்குஇடைக்கால தடை விதித்துள்ளதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான முழுக் கட்டுப்பாட்டையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறது. இதனால் மது வாங்குவோர் ஆதார் கொண்டுவர வேண்டும்போன்ற உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.
அதேபோல், டோக்கன் தரும் இடம் தனியாக அமைய வேண்டும். மது வினியோககவுண்டர்களை அதிகரிக்க வேண்டும்.மது வாங்க வருவோர் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி செய்து தரவேண்டும்.550 பேர் வரிசையில் இருக்க வேண்டும்.மற்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து மறுநாள் மது வழங்கப்படும்.சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம் என உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.