திருச்சி மாவட்டம், முசிறி அந்தரப்பெட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன்(32). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்தார். அதில் இருந்து மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மது அருந்த அவருடைய தாயார் சுப்புலட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் மண்ணெணய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் தீக்காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து முசிறி காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.