Advertisment

'எந்த அமைச்சரும் வீட்டில் போய் தூங்கவில்லை;எல்லோரும் களத்தில் இருக்கிறார்கள்'-சபாநாயகர் அப்பாவு பேட்டி

nn

நெல்லையில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன. பிரேமலதா விஜயகாந்த் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு போட்டோ ஷூட் அரசுதான் நடைபெறுகிறது. வெள்ளம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தால் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்' என கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்த அப்பாவு, ''இந்த அரசு என்ன செய்தது; என்ன செய்யவில்லை என்று செய்தியாளர்கள் ஆகிய நீங்களே சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்குமே நான் சொல்கிறேன் முதல்வர் நம்முடைய மத்திய வானிலை ஆய்வு மையம் எங்கெல்லாம் வெள்ளம், மழை என்பதை பற்றி எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கணித்து சொல்லி உள்ளார்கள். சொன்ன இடங்களிலெல்லாம் முதல்வர் அந்த பகுதியில் உடனடியாக நிவாரண முகங்கள் ஏற்படுத்தினார். சென்னையை பொறுத்தவரை 143 இடங்களில் நிவாரண முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

புயல் ஆரம்பகட்டத்தில் இருந்தபோது ஒவ்வொரு நிவாரண முகாம்களாக அறிவித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் நிவாரணம் முகாம்களுக்கு பொருட்களை பாதுகாப்பாக வைத்துவிட்டுவந்து விடுங்கள். அல்லது வீட்டிலேயே மாடி இருக்கிறது என்றால் அங்கே தாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதையும் தாண்டி வெள்ளம் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தினால் தயார் நிலையில் தேசிய பேரிடர் எல்லா அரசு அதிகாரிகள் எல்லா பணியாளர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

உடனடியாக போய் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அரசு மாதிரி நடவடிக்கை யாரும் எடுக்கவில்லை. இதுவரை எந்த அமைச்சரும் வீட்டில் போய் தூங்கவில்லை. எல்லாருமே ஒவ்வொரு மாவட்டத்தில்பொறுப்பில் தான் இருக்கிறார்கள். அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் இருக்கிறார்கள். நான் இதை அரசியலுக்காக சொல்லவில்லை. தகவலுக்காக சொல்கிறேன்.

இதேபோல தற்போது எதிர்க்கட்சியாக இருக்கக்கூடியவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது பெரும் வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரியை தகவல் இல்லாமல் திறந்து விட்டதில்சென்னையில் பெருவெள்ளம் வந்தது. நாம் இங்கிருந்தே லாரி லாரியாக நிவாரணப்பொருட்களை அனுப்பினோம். நீங்கள் தான் எடுத்து போட்டீர்கள். அதிமுக ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்கள் என செய்திகள் வெளியானது. அந்த காலகட்டத்திற்கு இந்த காலத்திற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று பாருங்கள். வட மாநிலங்களில் பெருவெள்ளம் தென் மாவட்டங்களுக்கு மழை இன்னும் போதாது. மழை இன்னும் வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்''என்றார்.

APPAVU flood speaker TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe