No medicine; Minister Durai Murugan ordered the transfer of doctors

வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக செயல்படவில்லை எனக் கூறி இரண்டு அரசு மருத்துவர்களை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியிலிருந்து மருந்து வழங்கும் ஊழியரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வருமாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை எனச் சுகாதார நிலையம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், எக்ஸ்ரே கருவி, மருத்துவர்கள் முறையாக இல்லை என்பதை அறிந்து கோபமடைந்த அமைச்சர் துரைமுருகன், இரண்டு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

Advertisment

அதன்பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மருத்துவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் சரியாக செயல்படவில்லை. அதனால், பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகள் இல்லை. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகளில் மருந்துகள் உள்ளன. ஆனால், மருத்துவர்கள் முறையாக மருந்துகளைப் பெறாமல் இருப்பதால் தட்டுப்பாடு இருப்பது போல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.