Advertisment

கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது: குருமூர்த்தி

Advertisment

Advertisment

திமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், (7.8.2018) நேற்று மாலை, 6.10 மணியளவில் திமுக தலைவர் கலைஞரின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. அதாவது, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், இராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய தயாராக இருப்பதாக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,

பதவியில் இருக்கும் முதல்வர்களுக்கு தான் மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும். கலைஞரை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகில் தான் இடம் தர வேண்டும். முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய இடம் தருவதே மரபு. அதனால் கலைஞருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தரக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

gurumurthy kalaignar
இதையும் படியுங்கள்
Subscribe