தமிழ்நாடு காவல்துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சி போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் ஹெல்மட் அணிவதன் அவசியத்தை உணர்த்து வகையில் ’நோ ஹெல்மெட் நோ ரைடு” என்ற வாகனப் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியானது கிழக்கு கடற்கரை சாலையில் காலை 07 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை நடந்து முடிந்தது. 16 கிமீ நடந்த இந்த வாகனப்பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு டீசர்ட், கீ செயின், பங்கேற்பு சான்றிதழ், மற்றும் காலைச் சிற்றுண்டி ஆகியவை தாம்பரம் மாநகர காவல்துறை சார்பாக வழங்கப்பட்டது. இந்த வாகனப் பேரணிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.