Advertisment

''5,8 ஆம் வகுப்புக்கு வேண்டாம் பொதுத்தேர்வு''-அமைச்சர் செங்கோட்டையன் வீடு முற்றுகை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவித்த இந்த சூழ்நிலையில் பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பு அமைப்புகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Advertisment

 'No general public exam for class 5.8'- Minister Senkottayan's house blockaded

இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை என்ற அமைப்பு பொதுத்தேர்வு நடத்தினால் அது குழந்தைகளுக்கு எதிர்ப்பாக அமையும் என்று போராட்டம் நடத்துவதாகவும் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் வீட்டடை முற்றுகை போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த ஊரில் உள்ள வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.அதையும் மீறி இன்று ஆதித்தமிழர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

admk house minister sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe