Skip to main content

பேனருக்கு பதிலாக "ஹெல்மெட்" சூர்யா ரசிகர்கள் அதிரடி!

Published on 15/09/2019 | Edited on 15/09/2019

பேனருக்கு பதிலாக ஹெல்மெட் வழங்க சூர்யாவின் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும், அன்றைய தினம் 200 ஹெல்மெட்கள் வழங்கப்படும் என்று சூர்யாவின் ரசிகர்கள் அறிவித்துள்ளனர். நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் அறிவித்துள்ளனர். 

no flec donade 200 helmet surya movie when release  Surya fans decision


புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான "ஹெல்மெட்" வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும் என்று நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் ட்வீட். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யாவின் மாடல்; திரையரங்கை தாண்டி வெளியில் ஒலித்த சமூக அக்கறை

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

etharkkum thunindhavan surya fans vidos goes viral

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் முந்தைய படங்களான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை பார்க்க வந்த சூர்யா ரசிகர்கள் "நிக்கட்டும், உக்ரைன் - ரஷ்யா போர்...மலரட்டும் மனிதம்", "ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து வாழட்டும் மனிதம்... இது வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் புனிதம்" என்ற பல வாசகங்களடங்கிய துண்டு பிரசுரத்துடன் சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். நடிகர் சூர்யா மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது சூர்யாவை போன்றே அவரது ரசிகர்களும் சமூக அக்கறையை வலியுறுத்தும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பல்ரின் கவனத்தை பெற்று வருகிறது. 

 

 

Next Story

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்" - சூர்யா ரசிகர் மன்றம் அறிக்கை 

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

surya fans club talk about jai bhim movie issue

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர். 

 

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாக சித்தரித்துள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக காட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப்  பலர் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். அந்த வகையில் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாமக, பாஜக கட்சிகளுக்கு எதிராகப் பதிவிட்டுவருகின்றனர். 

 

ad

 

இந்நிலையில், ரசிகர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பிவருவதையும் நாம் கவனிக்கிறோம். சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு. சூர்யா அண்ணன் எந்த சாதி, மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். ‘சமூகம் பயன் பெற’ என்று அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.