No Escape... You can now pay fines through Paytm!

போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராதங்களை இனி பேடிஎம் மூலம் செலுத்தும் முறையை சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் என்று தொடங்கி வைத்தார்.

Advertisment

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் செலுத்தப்படுவதற்கான முறை கொண்டுவரப்பட்டது. இதனால் விதிமீறலில்ஈடுபடும் வாகன ஓட்டிகள் தபால் நிலையங்கள், போக்குவரத்து காவல் ஆணையர் அலுவலகம், நீதிமன்றம் மூலமாகவே அபராதங்களை செலுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் அபராத தொகையானது தேக்கம் அடைந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் போக்குவரத்து காவல்துறை சார்பில் 10 கால் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு நிலுவை அபராத தொகையானது தொலைப்பேசி மூலம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் தேக்கமடைந்த 11 கோடி ரூபாய் அபராதம் மீண்டும் பெறப்பட்டதாக தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில், தற்பொழுது பேடிஎம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சென்னையில் சுமார் 300 இடங்களில் க்யூஆர் கோட் மூலமாக அபராத தொகையை செலுத்தும் முறைஇன்று முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைச் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடக்கி வைத்தார்.