Skip to main content

தேர்தல் கமிஷனே வேண்டாம்... உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்து:சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம்- மதுரையில் பரபரப்பு!!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

மதுரை திருபரங்குன்றம் இடைதேர்தல் கடைசிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நெரத்தில் அங்கு போட்டியிடும் 35 சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து தேர்தல் கமிஷன் என்ற அமைப்பையே நீக்கிவிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கொண்டு தேர்தலை நடத்தவேண்டும் இல்லை என்றால் நியாயமான மக்களாட்சி மலராது எங்களுக்கு பயமா இருக்கு என்று புகார் கொடுக்க வந்தோம் என்று கூறினர்.

 

 

mm

 

போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர் உக்கிரபாண்டியோ ”தேர்தலாசார் இது ஒரு ஏரியாவிற்கு ஒரு அமைச்சர் தெருவுக்கு ஒரு எம்.எல்,ஏ என அலுகவலம் போட்டு ஒட்கார்ந்திருக்க இவர்களுக்கு பாதுகாப்பாக தெருவுக்கு தெரு போலீஸார் இருக்க மொத்தம் உள்ள 292 ஓட்டு பூத்துக்கு 20 பேர் ஒவ்வொரு வீடாக சென்று பெயர், வங்கி கணக்கு எண், போன் நம்பர், ஆகியவைகளை சேகரித்து விட்டனர். அடுத்து வெளியாட்கள் ஆங்காங்கே வாடகைக்கு வீடு பிடித்து கூட்டம் கூட்டமாக தங்கி அவர்களுக்கு சாப்பாடு செய்கிறோம் எனற சாக்கில் தெருவுக்கு தெரு மக்களுக்கு கறி சாப்பாடு ஜோரா பறிமாறபடுகிறது..

 

No Election Commission ... Leading Supreme Court Judge Leading Elections Independent Candidate Struggle in Madurai !!

 

இவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீடுகளில் டாஸ்மாக்கில் இருந்து நேரடியாக சரக்கு வேன்களில் கொண்டுவந்து இருப்பு வைக்கபடுகிறது முக்கிய விஐபிகளான ஓ.பி.எஸ். ஈ.பிஎஸ் வருகையின் போது கூட்டத்தை கான்பிக்க அந்தந்த தெருக்களில் உள்ளவ்ர்களுக்கு கறிவிருந்து சரக்கு படுஜோராக இருக்கு என்று போன்போட்டு அழைத்து மதியத்திலிருந்து அவர்களை தயார்படுத்தி ஸ்பாட்டுக்கு அழைத்துவரப்படுகிறார்கள். 

 

பேனர்,கொடி,பேண்ட்செட், செண்டமேளம்,ஆங்காங்கே தலைவர்கள் வரும் போது கூட்டத்தை நிறுத்திவைக்க டான்ஸ் பார்டிகள்,அனைத்தும் காண்ட்ராக்ட் தான் மொத்தமாக கொடுத்துவிட்டால் போதும் அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

 

No Election Commission ... Leading Supreme Court Judge Leading Elections Independent Candidate Struggle in Madurai !!

 

அடுத்து அதிமுக கட்சிகாரர்களுக்கு டோக்கன் கொடுத்துள்ளனர். அவர்கள் திருபரங்குன்றத்தில் குறிப்பிட்ட டீ ஸ்டால் மற்றும் ஹோட்டல்களில் மூன்றுவேளை சாப்பிட்டு கொள்ளலாம் இதனால் சுற்றி உள்ள டீ கடைகாரர்கள் ஹோட்டல்காரர்கள் அந்தத்த பகுதி அமைச்சர்கள் தங்கிருக்கும் வீடுகளுக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர் தங்களுக்கு அந்த ஆர்டர் வாங்க....

 

 

சரி எதிர்கட்சிகள் அமமுகவும், திமுகவும் என்ன செய்கின்றன என்று பார்த்தால் இந்தளவுக்கு செய்யமுடியாவிட்டாலும் அனைத்து வீடுகளுக்கும் சென்று பெயர் போன் நம்பர் வாங்கிவிட்டனர். கட்சிகாரர்களுக்கு தினசரி செலவுக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டு வேலைகள் நடக்கிறது. பிரச்சாரத்தின் அன்று கூடுதல் கவனிப்பும் கொடி, தோரணம் கட்ட இவர்களும் காண்ராக்ட்தான் விட்டிருக்கிறார்கள். ஆக இந்த மூன்று கட்சிகளில் எதிர்கட்சியான அமமுக, திமுக விற்கு போலிஸார் எவ்வளவுதான் கெடுபிடி செய்தாலும் அதையும் மீறி ஆட்கள் பலம் கட்சி பலத்தால் அதை முறியெடித்து காரியம் சாதிக்கின்றனர்..

 

No Election Commission ... Leading Supreme Court Judge Leading Elections Independent Candidate Struggle in Madurai !!

 

அய்யோ பாவம் இந்த சுயட்சைகள்தான் சார் நாங்கள் பிரச்சாரத்திற்கே ஒவ்வொரு முறையும் போலிஸிலும் சம்மந்தபட்ட வி.ஏ.ஓ விடம் ஒப்புதல் வாங்கிவிட்டுதான் பிரச்சாரமே செய்யமுடியும் எங்களை ஏளனமாக விரட்டுவது அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பது என கொடுமை தாங்க முடியல அதுதான் நாங்க எல்லோரும்

 

மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு புகாரா கொடுக்க வந்திருக்கோம். முடிஞ்சா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பார்த்தும் ஜனாதிபதியை பார்த்தும் கொடுக்கபோறோம்.. என்றுவேட்பாளர்கள ஆறுமுகம், நாகராஜ், உக்கிரபாண்டி, சேகர், மணிகண்டன் ஆகியோர் புகார்கொடுக்க வர அவர்களை உள்ளே விடாமல் போலிஸார் தடுத்துவிட்டனர்..

 

No Election Commission ... Leading Supreme Court Judge Leading Elections Independent Candidate Struggle in Madurai !!

 

கொதித்து போன வேட்பாளர் நாகராஜன் ”நம்மிடம் தினமும் மக்களுக்கு 300 ரூபாய் சம்பளம் கொடுத்து ஒவ்வொரு பூத்திற்ககு 100 பேரை சேர்த்துவைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கு ஓட்டுகேட்டு போனாலும் மக்கள் இல்லை எல்லோரும் ஆளும் கட்சிகாரங்க சம்பளம் கொடுத்து அழைத்து சென்றிருக்கிறார்கள் என்கின்றனர்..

 

mm

 

அவர்களின் ஒரு நாள் செலவே 3,கோடியை தாண்டும் கடைசி கட்டத்தில் அதிமுக ரூ.5000 மும் அமமுக ரூ.2000மும் திமுக ரூ1000மும் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் கமிஷனுக்கு எல்லாமே தெரியும். இப்பவே ஒவ்வொரு கட்சியும் ஒரு நாளைக்கு 2 கோடிக்கு மேல் செலவு செய்கின்றனர் மக்களுக்கு பணம் கொடுப்பதை வீடியோ எடுத்தே புகார் கொடுத்துவிட்டோம் ஒன்றும் செய்யமுடியவில்லை.

 

எங்களை தொகுதிகுள்ளேயே விடமாட்டிகிறாங்க ஏய் நீ யாரு சுயேட்சையா எங்க அன்ணன் ஓட்டை பிரிக்க வந்திருக்கியா? வெளியே போ என்று சொல்லும் அதிமுக கட்சிகாரர்கள் எங்க ஊர்காரரே இல்லை சென்னையிலிருந்து வந்தவர்கள் என்ன கொடுமை சார் இது. என்னோட ஊரில் நான் ஓட்டு கேட்க முடியவில்லை இது என்ன சனநாயகமா? அப்ப பதிவு செய்த கட்சிகாரர்கள்தான் தேர்தலில் நிற்கமுடியுமே? தேர்தல் அதிகாரி வந்த அன்று இதை சொன்னோம் சரி சரி தலையாட்டினார்கள் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.. என்று கொதிக்க அடுத்திருந்த சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகமோ, எங்க கண்ணுமுன்னாடி ஆளும் கட்சி பணபட்டுவாடா செய்கிறது அதை படம் பிடித்து புகார்கொடுத்தோம் எதுவும் இதுவரை கண்டுகொள்ளவில்லை ..

 

mm

 

”தெருவுக்கு தெரு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்வதை வீடியோ ஆதாரத்தோடு தேர்தல் கமிஷனின் அவசர அழைப்பிற்கு போனில் தொடர்பு கொண்டு சீக்கிரம் வாங்க இந்த இடத்தில் பணவிநியோகம் நடக்கிறது என்றால் நீ யாரு? எங்க நிற்கிற என்று சொல்லிவிட்டு போலீஸ் விரைந்து வந்து என்னை தர தரவென்று இழுக்க சார் நான் திருபரங்குன்ற வேட்பாளர் புகார் கொடுத்த என்னையே இப்படி செய்தால் என்ன சார் என்று கெஞ்சுகிற நிலைமையில் இருக்கு சார்.

 

வேறுவழியில்லாமல் சுயேட்சையா நிற்கிற 35 பேருக்கும் இதே நிலைமைதான் அதனால் நாங்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்த முடிவெடுத்து ஆட்சியர் அலுவலகம் வ்ந்திருக்கோம். அனைத்து இடைத்தேர்தலையும் நிறுத்துங்க இல்லாவிட்டால் யாரு இந்த தொகுதியை அதிக விலைக்கு எடுக்கிறாங்களோ அவர்களுக்கு விற்றுவிடுங்கள். தேர்தலே வேண்டாம் எதுக்கு இவ்வளவு பணத்தை கொட்டனும் எல்லாம் வியாபாரம்தானே ஜெயித்து போட்டபணத்தை எடுக்கபோறாங்க அப்புறம் எதுக்கு தேர்தல் ”போங்கடா நீங்களும் உங்க தேர்தலும்” என்று ஆவேசமாக கத்த போலிஸார் அவர்களை இடத்தை காலிபண்ணுகிறீர்களா இல்லை அரஸ்ட் பண்ணவா என மிரட்ட தலையில் அடித்து கொண்டு வேட்பாளர்கள் கலையத் தொடங்கினார்கள்...

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.